இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடமே தெரியாமல் போகும். சுப்பிரமணிய சுவாமி

subramaniyan swamyநேற்று பாகிஸ்தானில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாகிஸ்தானுக்கு சொந்தம். அதன் ஒரு இன்ச் பகுதியை கூட இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம் என பேசினார். இதனால் இந்திய பாகிஸ்தான் இடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அவருடைய பேச்சுக்கு இந்திய தலைவர்கள் இன்று பதிலடி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறுகையில், “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் முதிர்ந்த எண்ணமுடைய தலைவர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.பிலாவல் பூட்டோவின் காஷ்மீர் குறித்த கருத்து, அவர் யதார்த்த நிலையிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளார் என்பதை காட்டுவதாக இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், ”காஷ்மீர் குறித்த பிலாவல் புட்டோவின் கருத்து, அவரது அனுபவமின்மையையும், இந்திய நாட்டின் சக்தி குறித்து அவருக்கு தெரியவில்லை என்பதையும் காட்டுவதாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கூறுகையில், ”இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் இருக்கும் இடமே தெரியாமல் செய்யும் வல்லமை உண்டு. போரை இந்தியா விரும்பாததால் அவ்வாறு செய்யவில்லை” என்றார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சங்கர் பிரசாத் கூறுகையில், காஷ்மீர் குறித்த பிலாவல் பூட்டோவின் பேச்சை பார்க்கும்போது, அவர் தான், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை அனுப்புகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றார்.

Leave a Reply