இந்தியாவில் இருந்து வெளியேறிய கோடீஸ்வர்களின் எண்ணிக்கை 61,000 பேர். ஒரு அதிர்ச்சி சர்வே
கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையிலான 14 ஆண்டு காலத்தில் இந்தியாவிலிருந்து சுமார் 61,000 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தனியார் அமைப்பு ஒன்று எடுத்த சர்வே தெரிவித்துள்ளது. நியூ வேர்ல்ட் வெல்த் மற்றும் லியோ குளோபல் என்ற தனியார் அமைப்புகள் இணைந்து உலக அளவில் கடந்த 14 வருடத்தில் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய கோடீஸ்வரர்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்தது. இதன் முடிவு சமீபத்தில் வெளியானது. இந்த முடிவுகளின்படி இந்தியாவில் இருந்து கடந்த 14ஆண்டுகளில் 61,000 கோடீஸ்வரர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு குடிபெயரந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் உலக அளவில் அதிகளவு கோடீஸ்வரர்கள் சீனாவில் இருந்துதான் வெளியேறியுள்ளனர். இந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து மொத்தம் 91,000 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
நாட்டில் விதிக்கப்படும் வரி, பாதுகாப்பு இன்மை, குழந்தைகளின் கல்வி ஆகியவைகளே கோடீஸ்வரர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறியதற்கான காரணங்களை கூறியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வெளியேறிய கோடீஸ்வர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் சீனாவில் இருந்து வெளியேறிய கோடீஸ்வர்கள் ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் அதிகளவில் இடம் பெயர்ந்துள்ளனர்
உலக அளவில் அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் அடைக்கலம் புகுந்து நாடுகளில் இங்கிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இங்கு 1.25 லட்சம் வெளிநாட்டு கோடீஸ்வரர்கள் குடியேறியுள்ளனர். பிற நாடுகளில் வெளியேறிய கோடீஸ்வரர்கள் வரிசையில் பிரான்சில் 42,000 பேரும், இத்தாலியில் 23,000, ரஷ்யா 20,000, இந்தோனேசியா 12,000, தென் ஆப்பிரிக்கா 8000, எகிப்து 7000 என உள்ளனர்.