இந்திய கடற்படை தளபதி திடீர் ராஜினாமா.

இந்திய கடற்படையின் தளபதி திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் இன்று காலை இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்துரத்னா என்ற கப்பலில் திடீரென எதிர்பாராத வகையில் வாயு கசிந்ததால் கப்பல்படை வீரர்கள் 5 பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அந்த ஐந்து வீரர்களும் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வாயு கசிவு காரணமாக இரண்டு பேர் கடலில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்கள் இன்னும் கரை வந்து சேரவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் கடற்படைக்கு சொந்தமான கப்பல்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மட்டும் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதால் கடற்படை தளபதி மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக தளப்தி டி.கே.ஜோஷி தெரிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply