இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நியூக்ளியப் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Stipendiary Trainee (Technician/B) – Group (C)42 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/HRM/2015
மொத்த காலியிடங்கள்: 42
பணியிடம்: கல்பாக்கம், தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Stipendiary Trainee (Technician/B) – Group (C)
1. Plant Operator – 12
2. Electrician – 05
3. Electronic Mechanic & Instrument Mechanic – 06
4. Fitter – 19
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20.08.2015 தேதியின்படி 18 – 24க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.6,200, இரண்டாவது வருடம் மாதம் ரூ.7,200 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HR), HRM Section, Madras Atomic Power Station, Kalpakkam-603102
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.