நியூயார்க்: ரயிலில் சென்ற இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல்.

நியூயார்க்: ரயிலில் சென்ற இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல்.

அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் மாகாணத்தில் இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சமீபத்தில் இனவெறியர் ஒருவரால் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீளவில்லை. அதற்குள் அதே நாளில் இன்னொரு இனவெறி தாக்குதல் நடந்ததாக இளம்பெண் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இந்த தொடர் சம்பவங்களால் இந்தியர்கள் இனவெறி தாக்குதல் நடத்துபவர்களின் குறியாக இருப்பது தெரியவருகிறது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியில் வசிக்கும் ஏக்தா தேசாய் என்ற பெண் சம்பவ தினத்தன்று பணி முடிந்து ரெயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது திடீரென அமெரிக்கர் ஒருவர் அவரை இந்தியப்பெண் என தெரிந்து தகாத வார்த்தைகளை சத்தமாய் பேசி இனவெறி தாக்குதல் நடத்தியதாகவும், ஆனாலும் ஏக்தா அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அந்த ரெயிலில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த போதிலும் தனக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என்பது வேதனையான விஷயம் என்று அவர் கூறியுள்ளார். அவர் மட்டுமின்றி தனது அருகில் உட்கார்ந்திருந்த இன்னொரு ஆசியப்பெண் ஒருவர் மீதும் அவர் இனவெறி தாக்குதல் தொடுத்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ், மெட்ரோ அதிகாரிகளை ஏக்தா தொடர்பு கொண்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply