ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸில் இந்தியருக்கு கிடைத்த பெருமை
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக இந்திய போலீஸ் செயல்பட்டு வருவதாக கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வரும் நிலையில் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் பாசு என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலகில் தலைசிறந்த காவல்துறையான பிரட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக மார்க் ரெய்லி என்பவர் உள்ளார். அவர் ஓய்வுபெற உள்ளதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த அதிகாரியான நீல் பாசு அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்னதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசின் துணை ஆணையராகவும், பயங்கரவாத தடுப்பு படையின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தார்.
நீல் பாசுவின் தந்தை இந்தியாவில் இருந்து பிரட்டனுக்கு குடியேறியவர். அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணையும் இளைஞர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டதன் மூலம் நீல் பாசு பிரிட்டனில் பிரபலமடைந்தார்