இந்தியாவில் மூன்றாவது நிலை: இனிமேல் தான் ஆபத்து!
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன
ஆனால் மக்கள் அரசுகளுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது மூன்றாவது நிலை தொடங்கி விட்டதாகவும் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அபாயம் இந்தியாவுக்கு ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்
ஏப்ரல் 14 வரை மட்டுமின்றி மே மாதம் வரை இந்தியாவில் உள்ள மக்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், இந்த வைரசுக்கு எதிராக இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைத்தான் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவை சமாளிக்க திணறி வருகிறது. உலகின் மருத்துவ வசதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இத்தாலி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. ஆனால் இந்தியா, புனித பூமி என்பதால் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை இந்திய மக்கள் ஒன்றிணைந்து நிரூபிக்க வேண்டும்