ஒலிம்பிக்கில் சோபிக்காத இந்திய அணி வீரர்கள்
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்கவில்லை. பெரும்பாலான இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர்
1. நேற்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி, ஜெர்மனி அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியிடம் இந்திய அணி தோல்வி அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஆடவர் 10 மீ ஏர் ரைபில் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் மட்டுமே பெற்று 4வது இடத்தை மட்டுமே பிடித்ததால் வெண்கல பதக்கத்தை இழந்தார். இந்த போட்டியில் இத்தாலியின் நிக்கோலோ 206.1 புள்ளிகளுடன் தங்கமும், உக்ரைனின் குலிஷ் (204.6) வெள்ளியும், ரஷியாவின் விளாதிமிர் (184.2) வெண்கலமும் வென்றனர்.
3. மகளிர் வில்வித்தை போட்டியின் காலிறுதியில் தீபிகா குமாரி, லட்சுமி ராணி, பம்பேலா தேவி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ரஷ்ய அணியிடம் 4-5 என்ற கணக்கில் ரஷ்ய அணியிடம் தோல்வி அடைந்தது.
4. வில்வித்தைப் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவின் லட்சுமி ராணி முதல் சுற்றிலேயே தோல்வியை தோல்வியை தழுவி வெளியேறினார்.