சர்வதேச நிதி ஆணையத்தின் மேலாண்மை இயக்குனர் கிற்ஸ்டின் லகார்தே நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் கடந்த 15 ஆண்டுகளில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12 மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கிறிஸ்டின், ‘இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அபாரமாக உயர்ந்து வருவதாகவும், கடந்த 15 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு என்பது மிகப்பெரிய வளர்ச்சி என்றும் கூறினார்.
மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை பொருத்தவரையில் சீனாவின் மக்கள் தொகையை இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா முந்திவிடும் என்றும், அதேபோல் நைஜீரியா நாட்டு மக்கள் தொகை அமெரிக்க மக்கள் தொகையை முந்திவிடும் என்றும் கூறினார்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்கால இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அனைத்து நாடுகளூம் உணரவேண்டும் என்று கூறிய அவர், புதிய கண்டுபிடிப்புகள்,ஆய்வுகள், புதுமைகளை புகுத்துவது போன்றவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.