உலகின் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவன பட்டியலில் இந்தியன் ரயில்வே-இந்திய ராணுவம்.

indian armyஉலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட இந்தியன் ரயில்வேதான் என இதுவரை கூறப்பட்டு வந்த தகவல் தவறானது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

உலகின் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் எவை எவை என்பது குறித்த ஆய்வு ஒன்றை உலகப் பொருளாதார அமைப்பு சமீபத்தில் எடுத்தது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட முதல் 9 நிறுவனங்களின் பெயர்களும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:

1. அமெரிக்க பாதுகாப்புத் துறை                                 32 லட்சம் ஊழியர்கள்
2. சீன ராணுவம்                                                                 23 லட்சம் ஊழியர்கள்
3. வால்மார்ட்                                                                      21 லட்சம் ஊழியர்கள்
4. மெக் டொனால்டு                                                         19 லட்சம் ஊழியர்கள்
5. பிரிட்டன் தேசிய சுகாதார சேவைப் பிரிவு         17 லட்சம் ஊழியர்கள்
6. தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சீனா    16 லட்சம் ஊழியர்கள்
7. ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் சீனா                       15 லட்சம் ஊழியர்கள்
8. இந்தியன் ரயில்வே                                                    14 லட்சம் ஊழியர்கள்
9. இந்திய ராணுவம்                                                       13 லட்சம் ஊழியர்கள்

Leave a Reply