அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 24 காசுகள் குறைந்ததால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 540 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. அதேபோல் நிப்டி 170 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டார்கள் கவலை அடைந்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகமாகியுள்ளது.
அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக பங்குவர்த்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகமானாலும், கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.