இந்திய கடல் எல்லையை 19 அதிநவீன செயற்கைகோள்களின் உதவியுடன் சீனா கண்காணித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலால் பாதுகாப்பு வட்டார அளவில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயலர் மற்றும் பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் அவினாஷ் சந்தர் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனை எதிர்கொள்ள இந்திய கடல் எல்லையை கண்காணிக்க நாம் நவீன தொழில்நுட்பத்தில் செயற்கைகோள்களை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்தியா 80 முதல் 100 அதிநவீன செயற்கைகோள்களை உருவாக்கி கடல் எல்லையை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பில் மேற்கத்திய நாடுகளின் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்திய கடல் எல்லையில் வானிலிருந்து ஆளில்லா சாதனம் மூலம் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு என நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.
கடல் எல்லையில் கண்காணிப்பு குறித்து மணிக்கு மணி தகவல்கள் பெறும் வகையில் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவினாஷ் வலியுறுத்தினார். ஏற்கனவே சீனாவால் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.