இந்தோனேசியா: போதைப்பொருள் கடத்திய இந்தியருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்.
இந்தோனேஷியா நாட்டில் போதைப்பொருள் கடத்துவது கடுமையான குற்றமாக கருதப்பட்டு குற்றம் நிரூபணம் ஆனால் மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 48 வயது குர்திப்சிங் என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் குர்திப்சிங் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதால் அவருடைய மரண தண்டனை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியும், அந்நாட்டு அரசு கோரிக்கையை ஏற்காமல் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குர்திப்சிங்குடன் சேர்த்து இதே குற்றத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 13 பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் 4 பேர், நைஜீரியாவை சேர்ந்தவர்கள் 6 பேர், ஜிம்பாப்வேவை சேர்ந்தவர்கள் 2 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குர்திப் சிங்கின் மனைவி குல்விந்தர் சிங் கூறியதாவது: நானும் எனது மகள் மன்ஜித் கவுர், மகன் சுக்பிர் சிங் ஆகியோர் அனாதையாகி விட்டோம். எனது கணவர் நியூசிலாந்தில் ஓட்டுநர் வேலை தேடி சென்றார். வேலைவாய்ப்பு நிறுவன முகவரின் சதியால் இந்தோனேசியாவில் போதை வழக்கில் சிக்கி உயிரிழந்துவிட்டார் என்று கண்ணீருடன் கூறினார்.
.