கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. வாரத்தின் நான்காம் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது.
உலக சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஆசிய மற்றும் இந்திய பங்குசந்தைகள் கடுமையாக சரிந்தன. இதனால் நேற்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 255.14 புள்ளிகள் சரிந்து 20,193.35-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 82.90 புள்ளிகள் சரிந்து 6,001.10-ஆகவும் முடிந்தன. பல நிறுவனங்களின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளனர்.
வாரத்தின் கடைசி நாளான இன்றும் இந்திய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடனே இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.