ஆறாவது நாளாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம்!

ஆறாவது நாளாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம்!

shareஇந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (21.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

சர்வதேச சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. இன்றைய காலை நேர வர்த்தக தொடக்கத்தின்போது சென்செக்ஸ் 130 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தை புதன்கிழமையான நேற்று அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. இதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்தன. ஆயில் விலை அதிகரித்ததையடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சென்செக்ஸ் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. ஆனால், நிப்டி குறைந்து வர்த்தகமானது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 36.20 புள்ளிகள் உயர்ந்து 25,880.38 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி புள்ளிகள் உயர்ந்து 7914.70 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

இன்போசிஸ் 1,238.70 5.63%
ஐடியா செல்லுலார் 120.70 5.28%
பிபிசிஎல் 969.90 4.78%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,405.65 4.03%
பார்தி இன்ப்ராடெல் 396.80 2.88%

விலை குறைந்த பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப் 3,054.50 -2.97%
பேங்க் ஆப் பரோடா 148.10 -2.85%
கெயில் 359.45 -2.73%
ஓஎன்ஜிசி 207.55 -2.72%
எஸ்பிஐ 186.75 -2.68%

Leave a Reply