நிலையான ஆட்சி எதிரொலி. இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத எழுச்சி.

67423தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் இன்று காலை 9மணி முதல் வெளிவர தொடங்கியதால் இந்திய பங்குச்சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 863 புள்ளிகள் உயர்ந்துள்ளன. நிப்ட் 250க்கும் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் அளவுக்கு வலுவாகியுள்ளதால் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலையான ஆட்சி, நம்பிக்கையான பிரதமர், வளர்ச்சி பாதைக்கு இந்தியாவை கொண்டு செல்ல ஒரு வலுவான தலைவர் போன்ற காரணங்களால், இந்திய பங்குச்சந்தையில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து நிறுவன பங்குகளும் பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகள் ஆகியவற்றின் பங்குகள் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply