நியூயார்க்: இந்திய ஆன்மீக குருவுக்கு உலகின் மிக நீளமான பூமாலை காணிக்கை.

  World-s-longest18580இந்திய ஆன்மீக குருவான ஸ்ரீ சின்மோயின் 80-வது பிறந்தநாளையொட்டி, அவரது நியூயார்க் நகர சீடர்கள் 3.46 கி.மீ நீளமுள்ள உலகிலேயே மிக நீளமான பூமாலை ஒன்றை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளனர்.

garlandsri

இந்த மிகப்பெரிய பூமாலையை ஸ்ரீ சின்மோய் மாரத்தான் அணியில் இடம்பெற்றுள்ள 35 நாடுகளின் 170 உறுப்பினர்கள் மற்றும் 30 குழந்தைகள் இணைந்து, தயாரித்துள்ளனர். இந்த பூமாலைக்காக பல்வேறு நிறங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மலர்களை பயன்படுத்தப்பட்டுள்ளன. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த மாலையை இடம்பெற வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

srichin1

இந்த மாபெரும் பூமாலை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீ சின்மோயின் சீடரான பர்மேன் என்பவர்,  ‘தங்கள் குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், அவரது 80-வது பிறந்தநாளில் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பியதாகவும், இதற்காக 35 நாடுகளின் சீடர்கள் இந்த பூமாலை மூலமாக இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குருவின் பிறந்தநாளில் உலகம் முழுவதிலும் உள்ள அவரது சீடர்கள் நியூயார்க் நகரில் திரண்டு கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

longest garland

Leave a Reply