இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டி. கங்குலியின் கொல்கத்தா அணி சாம்பியன்.

sourav-ganguly-isl-final-0கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு ஐ.பி.எல் போல கால்பந்தாட்டத்திற்காக முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டதே இந்தியன் சூப்பர் லீக் என்னும் ஐ.எஸ்.எல். இதன் முதல் சாம்பியன் போட்டிக்கான போட்டி கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது இந்த போட்டியில் சவுரவ் கங்குலிக்கு சொந்தமான அத்லெடிக்கோ டி கொல்கத்தா அணியுடன் சச்சினுக்கு சொந்தமான கேரள பிளாக்பாஸ்டர்ஸ் அணி மோதியது. விறுவிறுபாக நடைபெற்ற இந்த போட்டியில் கங்குலியின் கொல்கத்தா அணி 1-0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதியாட்டம் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் கேரள மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நேற்றிரவு நடைபெற்றது. சச்சின் மற்றும் கங்குலி அணிகள் மோதுவதால் இந்த போட்டியை பார்க்க 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்க முடியாத நிலை இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில் கொல்கத்தா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டி கார்னரை மிகச்சரியாக பயன்படுத்தி கொல்கத்தா அணி கோல் அடிக்க கேரள அணியின் வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கொல்கத்தா அணியின் வீரர்களும், ரசிகர்களும் ஆரவாரத்தில் சந்தோஷ கூத்தாடினர்.  இந்தத் தொடரில் ரஃபிக் அடித்த ஒரே ஒரு கோல் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தது. இந்த வெற்றியை அந்த அணியின் உரிமையாளரான கங்குலியுடன், நிர்வாகிகள், வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply