மோடியை கீழ்த்தரமாக கேலிச்சித்திரம் வரைந்த பூடான் ஆசிரியை சஸ்பெண்ட்..

modiபூடானில் உள்ள தோகாவில் ஒரு இந்திய பள்ளி உள்ளது. அங்கு இந்தியாவை சேர்ந்த ஆசிரியை ஒருவர் பணிபுரிகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்தார்.

அதை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அது குறித்த புகார்கள் பள்ளி நிர்வாகத்துக்கு வந்தன. எனவே, அவரிடம் நிர்வாகம் விசாரணை நடத்தியது.

தொடக்கத்தில் 3 நாட்கள் அவர் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதற்கு அவரது நண்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு. அந்நாட்டு குடிமக்கள் தங்களது கருத்து சுதந்திரத்தை வெளியிட உரிமை உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஆனால், நிர்வாக தரப்பில் கூறும் போது, “மோடி கேலி சித்திரத்துடன் பள்ளியின் சின்னம் மற்றும் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதனால் பணிநீக்கம் செய்யப்பட்டார்’’ என்றனர்.

அதே நேரத்தில் பூடானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அது குறித்து நிறைய புகார்கள் வந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply