எறும்பு கடித்ததால் பலியான இந்திய பெண்: சவுதி அரேபியாவில் பரிதாபம்
விஷ எறும்பு கடித்ததால் சவுதி அரேபியால் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய பெண் மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி(36), தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒருவகை எறும்பு கடித்ததால் ரத்தத்தில் பரவி இருந்த நச்சுத்தன்மை முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சூசி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.