இந்திய-சீன எல்லையை பாதுகாக்க பயிற்சி வாய்ந்த வீராங்கனைகள் நியமனம்
இந்திய, சீன எல்லையில் பயிற்சி வாய்ந்த சுமார் 100 வீராங்கனைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 8000 முதல் 14000 அடி உயரம் வரை உள்ள ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்த வீராங்கனைகளுக்கு முன்னதாக 44 வாரங்கள் போர் பயிற்சி, ஆயுதங்கள் கையாளும் விதம், மலையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி மோசமான வானிலையை எதிர்கொள்வது எப்படி என்ற பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தீவிர பயிற்சிக்கு பின்னரே சீன எல்லையில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது 100 வீராங்கனைகள் ஜம்மு காஷ்மீரின் இந்திய-திபெத் எல்லையிலும், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சீன எல்லையான இந்த பகுதியில் நமது வீராங்கனைகள் தைரியமாக பணிபுரிந்து வருவது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.