பெண்கள் கிரிக்கெட்: இலங்கையை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இருநாடுகளின் பெண்கள் அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது.
பின்னர் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 45.2 ஓவர்களில் 138 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மீண்டும் அதே ராஞ்சியில் நாளை நடைபெறும்.
Chennai Today news: Indian Women team won Srilanka women team by 107 runs