இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அதிகாரிகள் வேலை

index

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நம்மால் பெரும்பாலும் ஐ.ஓ.சி.எல்., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி மற்றும் பிரித்தெடுக்கும் நிறுவனமான ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் பார்சூன் குளோபல் 500 நிறுவனங்களில் 125ஆவது இடத்தில் இருப்பது சிறப்பாகும்.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் மற்றும் எச்.ஆர்.எம்., பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 30.06.2015 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் பட்டதாரியாக இருந்து எம்.பி.ஏ., படித்தவராக இருந்தால் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதி இல்லாதவர்கள் அதிகபட்சம் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

images
கல்வித் தகுதி: முழு நேரப் படிப்பாக இரண்டு ஆண்டுகாலம் படிக்கக்கூடிய போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ அல்லது எம்.பி.ஏ., படிப்பை உரிய பிரிவில் சிறப்புப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: யு.ஜி.சி., நெட் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணல் அல்லது குழுவிவாதம் என்ற நிலைகளைக் கடக்க வேண்டும். யு.ஜி.சி., நெட் தேர்வு வரும் டிசம்பர் 28 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் சலான் மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.11.2014
கட்டணம் செலுத்த இறுதி நாள்: 18.11.2014
இணையதள முகவரி: www.iocl.com/download/Open_Recruitment_MBA_Marketing_%20%20HR_Detailed%20Ad_New_2014.pdf>

Leave a Reply