ஜி-சாட் 16 செயற்கைக்கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

gsat16பிரெஞ்ச் கயானா பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஜி-சாட் 16 என்ற புதிய செயற்கைகோள் இன்று விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது.

தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-16 செயற்கைகோள் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

3,181 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளில் 48 சாதனங்கள் உள்ளன. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால் உருவாக்கபப்ட்ட இந்த  செயற்கைகோள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள சேவை, தொலைபேசி சேவை ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும்.

800 கோடிரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை கோளில் 12 கியூ பேண்டுகள், 24 சி பேண்டுகள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பாண்டுகள் உள்ளன. ஏரியன் ராக்கெட் மூலம் இஸ்ரோ ஏவப்படும் 18-வது செயற்கை கோள் இதுவாகும். மேலும் இன்சாட் 3இ செயற்கை கோளுக்கு மாற்றாக ஜிசாட்16 உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply