ரூ.425 கோடி மதிப்புள்ள மும்பை பங்களாவை வாங்கிய பிரபல தொழிலதிபர்

ரூ.425 கோடி மதிப்புள்ள மும்பை பங்களாவை வாங்கிய பிரபல தொழிலதிபர்
[carousel ids=”71504,71505,71506″] பிரபல தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா ரூ.425 கோடிக்கு மும்பையில் உள்ள ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார். உலகின் பல நகரங்களில் இதைவிட அதிக விலை மதிப்புள்ள பங்களாக்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பங்களா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா. இவர் மும்பையின் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க ‘ஜதியா ஹவுஸ்’  என்ற பங்களாவை விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் விலை ரூ.425 கோடி. 25,000 சதுர அடி கொண்ட இந்த பிரமாண்டமான பங்களா  நாட்டிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பங்களா என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன், மும்பையின் நபியான் சீரோடு பகுதியில், JSW நிறுவன அதிபர் சாஜன் ஜிண்டால் ‘மகேஸ்வரி ஹவுஸ்’ என்ற பங்களாவை ரூ.400  கோடிக்கு வாங்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. ஜதியா பங்களாவின் முன்னாள் உரிமையாளர் ஒய்.ஜதியா, 1970களில் இக்கட்டடத்தை வகீல் என்பவரிடமிருந்து அவர் வாங்கினார். இந்நிலையில் பிர்லா, இந்தக் கட்டடத்தை தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply