சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்கள். 13 குழந்தைகளை கடத்தி கொன்றவர்கள்.

two sistersஇந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை பெண் குற்றவாளிகள் யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதில்லை. ஆனால் முதல்முறையாக மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவுள்ளது. சகோதரிகளான இவர்கள் இருவருக்கும் விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த ரேணுகா கிரண் ஷிண்டே மற்றும் அவரது சகோதரி சீமா மோகன் காவிட் ஆகிய இருவரும் கடந்த 1990 முதல் 1996 ஆம் ஆண்டு வரை 13 ஏழைக்குழந்தைகளை கடத்தி அவர்களை கட்டாயப்படுத்தி திருட வைத்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைகள் அனைவரும் வளர்ந்த பிறகு அவர்களை  கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் ஜனாதிபதியிடம் விண்ணப்பித்த கருணை மனுக்கள் ஆகியவை நிராகரிக்கப்பட்டதால் இவர்களின் தூக்கு தற்போது உறுதியாகியுள்ளது.

இரண்டு சகோதரிகளையும் எந்த நேரத்திலும் தூக்கில் போடலாம் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply