செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கல்யான். இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

 10கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்ட மங்கல்யான் விண்கலம் 80% பயணத்தை பூர்த்தி செய்துவிட்டதாகவும், அந்த விண்கலம் மிக விரைவில் செவ்வாய் கிரகத்தை சென்று அடையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, மங்கள்யான் என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவியது. தற்போது இந்த விண்கலம், சூரிய வட்டப் பாதையில் 540 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை (80 சதவீதம்) வெற்றிகரமாக கடந்து விட்டது. இன்னும் 2 மாதங்களில் அதாவது வரும் செப்டம்பர் 24 அன்று மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது.  மங்கள்யான் விண்கலம் 5 ஆராய்ச்சி கருவிகளுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, மங்கள்யான் விண்கலத்திற்கும், பெங்களூருவில் இருக்கும் தொலை தொடர்பு மையத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு 15 நிமிடங்கள் வரை ஆகிறது

Leave a Reply