இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் வங்கி நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் அனைத்து மகளிர் வங்கியின் முதல் கிளை லக்னோவில் திறந்துவைக்கபட்டுள்ளது.
அந்த வங்கியில் 10 பெண் ஊழியர்கள் பணிப்புரிவார்கள் எனவும், ஒரு ஏடிஎம் மையமும் திறந்துவைக்கபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
முதலில் நாடு முழுவதும் எழு கிளைகள் இன்று திறக்கப்பட்டன. இவற்றை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மும்பையில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மகளிருகான பாரதிய மஹிலா வங்கி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 25 கிளைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பதும், பெண்களின் வாழ்வை மேம்படுத்த அவர்களுக்கு எளிய முறையில் கடன் அளிப்பதே இந்த வங்கியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.