இந்திய விஞ்ஞானிகள் கடந்த வருடம் அனுப்பிய மங்கள்யான் விண்கலம், முதல்முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாடு இந்தியாதான் என்ற பெருமையை நம் பாரத நாடு பெற்றுள்ளது.
இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய‘மங்கள்யான்’ என்ற விண்கலம் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் உருவாக்க இந்தியா ரூ.460 கோடி செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் மேல் விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
மங்கள்யான் விண்கலத்தில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த முக்கியமான நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்வையிடுவதற்காக பாரத பிரதமர் பிரதமர் நரேந்திரமோடி நேற்று பெங்களூர் வருகை தந்திருந்தார்.
இதன்மூலம் பெரும் சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசியபோது, ”மங்கள்யான் வெற்றியடையும் என முழு நம்பிக்கை இருந்தது. விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். சாதிக்க முடியாததை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.
கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மங்கள்யான் சாதனை படைத்துள்ளது. முதல் முயற்சியிலேயே வெற்றி எட்டப்பட்டிருக்கிறது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா. முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். விண்வெளித் திட்ட சாதனைகளுக்கு இது ஒரு அடையாளம்.
வருங்கால சந்ததியினருக்க்கும்ம் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிகாட்டி இருக்கிறார்கள். தெரியாத ஒன்றை ஆய்வு செய்ய நம் விஞ்ஞானிகளைவிட வேறு யாருக்கும் ஆர்வம் இல்லை ” என்று பாராட்டினார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/Y4s9ZM” standard=”http://www.youtube.com/v/VZL_Vwy0JqI?fs=1″ vars=”ytid=VZL_Vwy0JqI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4167″ /]