சென்னை எத்திராஜ் கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

Smriti Iraniசென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினம் நேற்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்மிருதி இரானி அவர்கள் பேசும்போது பன்மொழிக் கலாச்சாரம் என்பது இந்தியாவுக்கு கிடைத்த சொத்து என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த பன்மொழிக் கலாச்சாரம் இந்தியாவுக்கு கிடைத்த சொத்து. பாரம்பரியமான பன்மொழிக் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தாய்மொழிகள் பலவாக இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் இருப்பது ஒரே உயிர்தான்.

நம் மொழி என்னவாக இருந்தாலும், கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் இந்தியாவை வளர்ச்சியின் புதிய எல்லைக்கு கொண்டு செல்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டியது அடுத்த தலைமுறை இளைஞர்கள், குறிப்பாக இளம்பெண்களின் கடமையாகும். அவர்கள் ஒவ் வொருவரும் தாய்மொழி மீதும் தாய்நாடு மீதும் அக்கறை கொண் டவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1DM35I0″ standard=”http://www.youtube.com/v/uyikrtU9pqI?fs=1″ vars=”ytid=uyikrtU9pqI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9803″ /]

மேலும் இந்த விழாவில் ஸ்மிருதி இரானி தமிழில் சில வார்த்தைகள் பேசினார்.‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குமில்லை’ என்று பாரதியாரின் கூற்றை நினைவுகூர்ந்தார். மேலும் அவர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘இணைய வழியில் செம்மொழித் தமிழ்’ என்ற இணைய பாடப்படிப்பை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி.எம்.முரளிதரன், கல்லூரி முதல்வர் ஏ.நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply