இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக தல்பீர் சிங் சுகாக் நியமிக்க மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. 15வது மக்களவையை தேர்ந்தெடுக்க தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலை நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்ததுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. பதவி முடியும் நேரத்தில் இதுபோன்ற மிகப்பெரிய முடிவு எடுப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று அரசியல் தலைவர்களும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ராணுவ தளபதியை நியமனம் செய்துள்ள மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
மார்ச் 5ல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததால் தளபதி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்றுதான் என்றும் மத்திய அமைச்சரவை விளக்கம் அளித்துள்ளது மேலும் தேர்தல் முடிந்ததை அடுத்து புதிய தளபதி நியமனத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தந்ததாக கூறியது.