இந்தியாவின் ஏழை, பணக்கார முதல்வர்கள் யார் தெரியுமா?

இந்தியாவின் ஏழை, பணக்கார முதல்வர்கள் யார் தெரியுமா?

இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆளும் முதல்வர்களின் சொத்து பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவிலேயே பணக்கார முதல்வராக ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவருக்கு ரூ.177 கோடி சொத்து மதிப்பு உள்ளது. அதேபோல் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் என்பவரிடம் ரூ.26 லட்சங்கள் மட்டுமே சொத்து மதிப்பு உள்ளதால் இவரது பெயர் கடைசி இடத்தில் உள்ளது.

சந்திரபாபு நாயுடுவை அடுத்து அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீம கந்து 2வது இடத்தில் உள்ளார். இவருக்கு ரூ.129.57 கோடி சொத்து மதிப்பு உள்ளது.

மேலும் ரூ.48.31 கோடி சொத்து மதிப்புடன் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் 3வது இடத்தில், இருக்கிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் (ரூ.15.15 கோடி) 4வது இடத்திலும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மா (ரூ.14.50 கோடி) 5வது இடத்திலும் இருக்கின்றனர். இந்தியாவி 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், இதில், அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள் பட்டியலில் ஒரு பாஜக முதல்வர் கூட இடம்பெறவில்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply