இந்தோனேஷிய விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. 116 பேர் பரிதாப பலி

இந்தோனேஷிய விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. 116 பேர் பரிதாப பலி

[carousel ids=”67393,67394,67395,67396,67397,67399,67400,67401,67402,67403,67404,67405″]

இந்தோனேசியா விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று  புறப்பட்ட இரண்டே நிமிடத்தில் விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 116 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் தயாரான இந்தோனேஷியா நாட்டிற்கு சொந்தமான நான்கு என்ஜின்கள் கொண்ட ‘சி-130 ஹெர்குலிஸ்’  என்ற விமானம் நேற்று இந்தோனேஷிய நேரப்படி மதியம் 12.08 மணிக்கு, சுமத்ரா தீவில் மேதன் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேட்டுனா தீவுக்கு 3 விமானிகள் உள்பட 12 ஊழியர்கள் மற்றும் 101 விமானப்படை வீரர்களுடன் கிளம்பியது.

விமானம் புறப்பட்டவுடன் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தில் இயந்திர கோளாறு இருக்கிறது அதனால், மீண்டும் விமானத்தை தரையிறக்க அனுமதி வேண்டும் என்றும் அனுமதி கேட்டுள்ளார். விமானியின் கோரிக்கை ஏற்கப்பட்டு விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நொடிகளில் விமானம் கீழே  விழுந்து விபத்துக்குள்ளாகி விமானத்தில் இருந்த 113 பேர்களும் பரிதாபமாக பலியாகினர்.

மேலும் இந்த விமானம் மக்கள் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து எரிந்ததால், அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த 113 பேர்களும் பொதுமக்களில் 3 பேரும் ஆக மொத்தம் 116 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

மேலும், இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு, அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பலியானவர்களின் குடும்பங்களுக்கு பொறுமையையும், பலத்தையும் கொடுக்க வேண்டும். இத்தகைய பேரிடர்களில் இருந்து இனி நாம் காக்கப்படுவோமாக” என்று கூறி உள்ளார்.

Leave a Reply