இந்தோனேஷியா: பைக்கில் ஒன்றாக பயணம் செய்ய திருமணமாகாத ஜோடிகளுக்கு தடை.

bikeஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அரபுநாடுகளில் பெரும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் இந்தோனேஷியாவிலும் இஸ்லாமிய மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள அச்சே என்ற மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் திருமணமாகாத ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணம் செய்வதற்கு தடை விதிக்க அப்பகுதி அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவ, மாணவிகள் தனித்தனியாக பள்ளிகளில் படிக்க வேண்டும் என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை போட்டபடி பயணிம் செய்ய கூடாது என்றும் இரண்டு கால்களையும் ஒரே பக்கமாக வைத்தபடி பின் இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றும் அப்பகுதி அரசியல்வாதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகணம் ஒன்று தான் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தை கடுமையான வகையில் நடைமுறைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply