ஜே.கே.எஸ் என்ற இயக்குனர் இயக்கி வரும் ‘கரையோரம்’ என்ற திகில் படத்தில் நிகிஷா, இனியா, மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நிகிஷா நாயகியாகவும், இனியா வில்லியாகவும் நடிக்கின்றார். சிம்ரன் போலீஸ் வேடத்தில் கெளரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சமீபத்தில் நடைபெற்றபோது, இனியாவுக்கும் நிகிஷாவுக்கும் யார் பெரிய நடிகை என்பதில் வாக்குவாதம் ஆரம்பித்து பின்னர் அது பெரிய சண்டையாக மாறிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருவருமே தங்களது கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று டைரக்டரை நிர்ப்பந்தித்ததாகவும், இந்த சண்டை முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் குடுமியை பிடித்து சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைப் பார்த்ததும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து பின்னர் இருவரையும் கஷ்டப்பட்டு பிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து சினிமா பிரபலம் ஒருவர் கூறியபோது, ‘கரையோரம் படத்தை ஊடகங்கள் மூலம் இலவசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர் இதுபோன்ற ஒரு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் என்று கூறினார்.
இந்த உண்மை தெரியாத ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு இனியா-நிகிஷா சண்டை குறித்து எழுதி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.