மாட்டுக்கறி விருந்து வைத்த எம்.எல்.ஏ மீது மை வீச்சு. இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்றது.

மாட்டுக்கறி விருந்து வைத்த எம்.எல்.ஏ மீது மை வீச்சு. இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்றது.
mla
கடந்த சில மாதங்களாக மாட்டிறைச்சி விவகாரம் வலுத்து வரும் நிலையில், மாட்டுக்கறி விருந்து வைத்த ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ ஒருவர் மீது கருப்பு மை வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரம் சாதாரண பாமரன் முதல் சாகித்ய அகாடமி பெற்ற எழுத்தாளர்கள் வரை பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவதைபோல சில தினங்களுக்கு முன்னர் தாத்ரி சம்பவத்தைக் கண்டித்து மாட்டிறைச்சி விருந்து வைத்த ஜம்மு – காஷ்மீர் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. இன்ஜினியர் ரஷீத் முகத்தின் மீது நேற்று அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் சிலர் மை வீசினர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் இருவரை கைது செய்துள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கு இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

மை வீசப்பட்ட எம்.எல்.ஏ ரஷீத் இதுகுறித்து கூறும்போது, “பாகிஸ்தான் தாலிபான்மயமாவது பற்றி மக்கள் பேசி வருகின்றனர், இங்கு என்ன வாழ்கிறது? அவர்கள் மன நோய் பிடித்தவர்கள். காஷ்மீரில் 80,000 பேர் பலியாகியுள்ளனர், என் மீது மை வீசுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை” என்று தாக்குதலுக்குப் பின்னர் கூறினார்.

மை வீச்சுக்கு முன்பாக அவர் கூறியபோது, “என்னுடைய பசுவை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமே. என் பசு மீது மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று பேசினார்.

Leave a Reply