மே 3ல் அறிமுகமாகிறது இனோவா க்ரிஸ்டா!

மே 3ல் அறிமுகமாகிறது இனோவா க்ரிஸ்டா!
innova
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவியான இனோவாவின் 2வது ஜெனரேஷன் மாடலாக, முற்றிலும் புதிய TNGA ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட இனோவா க்ரிஸ்டாவை, வருகின்ற மே3, 2016 அன்று களமிறக்குகிறது டொயோட்டா. 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் – 5ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எனப் பல ஆப்ஷன்களுடன் வர இருக்கும் இனோவா க்ரிஸ்டா, GX, VX, ZX எனும் மூன்று வேரியன்ட்டில் விற்பனைக்கு வருகிறது. பழைய இனோவாவுடன் ஒப்பிடும்போது, இனோவா க்ரிஸ்டாவின் டிஸைன் படுமாடர்ன்னாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது. மேலும் நீள/அகல/உயர அளவுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. அறுகோண வடிவில் அகலமாக இருக்கும் க்ரில், கரோலா மற்றும் கேம்ரி கார்களை நினைவுபடுத்துகிறது.

புதிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டில் DRL மற்றும் புதிய வடிவத்தில் டெயில் லைட் இருப்பது சிறப்பு. பழைய இனோவாவில் இருக்கும் 2.5 லிட்டர் டீசல் இன்ஜினுக்குப் பதிலாக, 149bhp பவர் – 34.3kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 174bhp பவர் – 36kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பழைய இனோவாவின் மைனஸாக இருந்த பவர் குறைபாடு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. இரண்டு இன்ஜின்களும் யுரோ-5 மாசுக் கட்டுப்பாடுக்கு ஏற்ப செயல்படுவதுடன், 5 ஸ்பீடு மேனுவல் – 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. பழைய இனோவாவைப் போல புதிய இனோவா க்ரிஸ்டாவும் லேடர் சேஸி அமைப்பைக் கொண்டிருந்தாலும், சஸ்பென்ஷன் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ABS, காற்றுப்பைகள், ESC, Hill Descent Control போன்ற தற்கால பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் இனோவா க்ரிஸ்டாவில் இடம்பெறும் என நம்பலாம். வெளிப்புறத் தோற்றத்தைப் போலவே, காரின் உட்புறமும் வியக்கத்தக்க அளவில் மாற்றம் கண்டுள்ளது. பலவித கலர்கள், மெட்டிரியல், வடிவங்கள் என டேஷ்போர்டு ஈர்க்கிறது. இதில் லைட்டிங் வசதி, டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், நேவிகேஷன் – வாய்ஸ் கமாண்ட் – ப்ளுடூத் – இன்டர்நெட் ஆகிய வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரின் என சிறப்பம்சங்களுக்குப் பஞ்சமில்லை. 6/7 இருக்கைகள், ஸ்டீயரிங், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் என அனைத்தும் புதிதாக இருக்கின்றன. இதுதவிர கடைசி வரிசை இருக்கைகள் பழைய காரைவிட புதியதில் வசதியாக இருக்கும் எனவும், 50,000 ரூபாய் செலுத்தி இனோவா க்ரிஸ்டாவை தனது டீலர்களில் புக் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது டொயோட்டா.

Leave a Reply