8 அடி அகலத்தில் பிரமாண்டமான வீடு. டோக்கியோ நிறுவனம் சாதனை
ஜப்பானில் வெறும் எட்டே அடி அகலத்தில் ஒரு பிரமாண்ட வீடு கட்டபப்ட்டுள்ளது. கண்ணாடி மற்றும் இரும்புகளால் ஆன இந்த வீட்டினை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதிக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் அதிகரித்து வரும் ஜனத்தொகைக்கு ஏற்ப வீடுகளை குறுகிய இடத்தில் அழகிய வடிவில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு நடந்து வந்தது. இதன்படி டோக்கியோவில் உள்ள UA என்ற தனியார் கட்டுமான நிறுவனம் வெறும் எட்டு அடி அகலத்தில் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளது.
டோக்கியோவிலேயே இதுதான் மிகக்குறைந்த பரப்பளவில் கட்டப்பட்ட வீடு என்பது குறிப்பிடத்தக்கது. கார் பார்க்கிங் அகலத்துக்குள் மட்டுமே உள்ள இந்த குட்டி வீடு மற்ற வீடுகளில் அமைந்துள்ள எல்லா அம்சங்களும் நிரம்பியுள்ளது.
இந்த வீடு, இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு, அலமாரிகளை மாடிப்படிகளுக்கு அருகேயே வைத்துள்ளனர். இதனால் அது அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றாது. இதேபோன்று, இடத்தை அடைக்காமல் இருக்கும் விதமாக விளக்குகள் சுவர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன.
இதைவிடவும் குட்டியான வீடு போலந்தின் வார்ஸா பகுதியில் வெறும் 1.22 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
[carousel ids=”68646,68647,68648,68649,68650,68651,68652,68653″]