முறையான தூக்கமின்மை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும்

002c855b-5c0f-4921-bb6d-b59b5fb7db73_S_secvpf

தூக்கம் நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் அவ்வப்போது பரிந்துரைத்துக் கொண்டே வருகின்றன. எனினும், தூங்காமல் நாம் வேலைகளை செய்து முடிப்பதை பெரிய சாதனையாகவே கருதுகிறோம். தூக்கமின்மை நம்மை சிடுசிடுப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாது நிறைய உபாதைகளை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஏழு மணி நேரத் தூக்கம் அத்தியாவசியம் என்று நமக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள், தற்போதைய ஆராய்ச்சிப்படி, தொடர்ந்து ஆறு மணிநேரத் தூக்கம் கூட இல்லாமல் நான்கு நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால், நமக்கு தும்மல் மற்றும் சளி பிடிக்க வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள உளவியல் துறை பேராசிரியர் ஆரிக் ப்ரேத்தர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஒரு தங்கும் விடுதியில் ஏழு நாட்களுக்கு தங்கியிருந்த 164 பேருக்கு, சளி ஏற்படுத்தும் வைரஸ் செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

அதில், ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாக, முழுமையான தூக்கமின்றி இருந்தவர்களுக்கு தும்மல் ஏற்பட்டது. ஆகவே, முறையான தூக்கம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் உருவாக்கும் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. சமூக சூழல்கள், சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் மற்றும் அவர்களது குணநலன் ஆகியவையும் இதற்கு காரணிகளாக இருந்தாலும், முக்கிய காரணியாக தூக்கமின்மையே இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரசு கடந்த 2013-ம் ஆண்டு நோய்த் தடுப்பு மையம், முறையான தூக்கமின்மை சாலை விபத்துக்கள், தொழிற்சாலை விபத்துக்கள் மற்றும் மருத்துவ துறையில் பல்வேறு தவறு நிகழக் காரணமாக இருக்கும் தொற்று நோய் என தெரிவித்திருந்தது.

எனவே, வேலைப் பளு என்று கூறி தூக்கத்தை துறக்காதீர்கள். தூக்கம் இல்லாதிருந்தால் எதிர்பாராத பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.

Leave a Reply