மழைநீர் சேகரிப்பு இல்லை என்றால் ரூ.5 லட்சம் அபராதம்: அரசு அதிரடி அறிவிப்பு

மழைநீர் சேகரிப்பு இல்லை என்றால் ரூ.5 லட்சம் அபராதம்: அரசு அதிரடி அறிவிப்பு

மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டுமென்றும் அவ்வாறு இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது இதனால் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்தூர் மாவட்ட நிர்வாகம் மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு வீட்டிலும் அமைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 5000 ரூபாய் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது

இதே தொழிற்சாலைகள் மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யாவிட்டால் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது