புகார் கிடைத்த உடனேயே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவல் நிலையங்களில் புகார் கிடைத்த உடனேயே எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆரம்ப கட்ட விசாரணை தேவையில்லை என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சில புகார்களில் தேவைப்பட்டால் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எப்ஐஆர் நகலை சம்பந்தப்பட்டவர்களிடம் உடனே வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply