ஃபே|ஸ்புக், டுவிட்டரால் பிரச்சனையா? கவலை வேண்டாம். இதற்கும் இன்சூரன்ஸ் வந்துவிட்டது
சமீபத்தில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் பலர் சர்ச்சைக்குரிய பதிவுகளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பதிவு செய்துவிட்டு பின்னர் கடும் கண்டனங்களையும், வழக்குகளளயும் சந்தித்து வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் தற்போது அனைவரும் தைரியமாக வழக்கு மற்றும் கைது நடவடிக்கை பயமின்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யலாம்.
ஏனெனில் இதற்கென ஒரு காப்பீடு திட்டத்தை பஜாஜ் அலியன்ஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. உங்கள் சமூக வலைத்தள பதிவினால் ஏற்படும் பிரச்சனைகளுக்குரிய செலவுகளை இந்நிறுவனம் பார்த்துக்கொள்ளும். இதுவரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், இணைய வணிக நிறுவனங்கள் போன்றவை நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வசதி இருந்த நிலையில் தற்போது தனி நபருக்கும் இந்த வசதி கிடைத்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் அலியான்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் தனபந்த் சிங்கா”சமூகவலைதளங்களில் தனிநபர்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய பதிவுகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போது , இந்த திட்டத்தின் படி, அந்த வழக்கிற்கு விதிக்கப்படும் அபராத்திற்கு காப்பீடு வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.
மேலும் இந்த தனிநபர் இணையக் காப்பீட்டின் மூலமாக பிஷிங்க், அடையாள திருட்டு, துன்புறுத்தல் , பேங்க் அக்கவுண்ட் ஹேக்கிங்க் போன்றவற்றிற்கு காப்பீடு வழங்குகிறது.