சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை: அதிர்ச்சி சம்பவம்

சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், மர்மகும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில், கபடி போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கே வந்த மர்மகும்பல் சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல் ஆம்பியனை சரமாரியாக சுட்டுக் கொலை செய்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்ற அபாரமாக விளையாடிய சந்தீப் நங்கல் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த முழு தகவல் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.