எபோலா நோயை கண்டுபிடிக்க விமான நிலையங்களில் ஸ்கேனர்கள். மத்திய அரசு முடிவு

scanerஉலகம் முழுவதிலும் மனித இனத்தை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் முதலில் ஆப்பிரிக்க நாட்டில் தோன்றி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. தற்போது எபோலா நோய் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எபோலா நோயை கண்டுபிடிக்க விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பொருத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

எபோலா போன்ற கொடிய வைரஸ் நோய்களை எளிதில் அடையாளம் காண நாடு முழுவதிலும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் 24 புதிய தெர்மல் ஸ்கேனர்களை பொருத்த மத்திய அரசின் சுகாதார நலத்துறை அமைச்சகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற 18 கருவிகள் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய, (குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகள்) இந்த தெர்மல் ஸ்கேனர்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது இருக்கும் 18 ஸ்கேனர்களின் மூலம் இன்று வரை சுமார் 33 ஆயிரம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply