சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகும் மலேசிய, தைவான் நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தில் முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிப்பார் என கூறப்பட்டு பின்னர் அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ரஜினியின் இன்னொரு படமான ‘கபாலி’ படத்திலும் ஹாலிவுட் நடிகர் ஜெட்லி வில்லனாக நடிக்கவிருப்பதாக அரிவிக்கப்பட்டு பின்னர் அந்த செய்தியும் மறுக்கப்பட்டது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கபாலி’ படத்தில் தைவான் நாட்டு நடிகர் Winston Chao மற்றும் மலேசிய நாட்டு நடிகர் Rosyam Nor ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளதாகவும் இதற்காக இருவருக்கும் மிகப்பெரிய தொகை சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும் டுவிட்டரில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்
பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Today News: International Villains Taiwanese Actor WinstonChao and Malaysian Actor RosyamNor are villains in Kabali