முதல்வரின் முகத்தில் எம்பாமிங் ஓட்டை எப்போது வந்தது? ஐஸ்பெட்டி தயாரித்தவரின் அதிர்ச்சி பேட்டி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல் கெடாமல் இருக்க ஐஸ்பெட்டி தயாரித்தவரின் பேட்டி முன்னணி ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ளது. அதில் முதலவரின் முகத்தில் இருந்த ஓட்டை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதோ அந்த பேட்டி
முதல்வரின் உடலை எடுத்துச் செல்ல என்ன மாதிரியான பெட்டி தேவைப்பட்டது?
அதிக அழுத்தம் கொண்டு நீண்ட நேரம் உடலை சில்லுப்பாக வைத்திருக்கும் பெட்டி ஒன்று தேவைப்பட்டது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அப்படியான பெட்டியை தயாரிப்பது வழக்கம், இரண்டு நாட்களுக்கு முன்பே அப்படி ஒரு புது பெட்டியை நான் தயார் செய்திருந்தேன். தங்க ப்ளேட்டிங் செய்யப்பட்டது. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆனது. முதல்வரின் உடலை எடுத்துச் செல்லதான் அதனை தயாரித்தேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எத்தனை மணிக்கு உங்களிடம் ஐஸ் பெட்டி கேட்டார்கள்?
அப்போலோ நிர்வாகத்திலிருந்து 11:45க்கு அழைப்பு வந்தது. முதல்வருக்கு என்றார்கள்.
முதலில் 10-11 மணிக்கு கேட்டார்கள் என்றீர்கள், பிறகு 11-11:30 என்றீர்களே?
அது முதல்வர் இறந்தது தாங்காமல் எமோஷனில் சொன்னேன் 11:50க்குதான் அங்கிருந்து அழைப்பு வந்தது.
இறந்த அவரது உடலைப் பார்த்த முதல் சில பேரில் நீங்களும் ஒருவர்…
ஆமாம்!. எப்படி நாம பார்த்தோமோ அப்படியே இருந்தது அந்த முகம். ஒரு மாசு இல்லை. பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவங்களை நாங்க நான்கு பேர் சேர்ந்துதான் ஐஸ் பெட்டியின் மீது தூக்கி வைத்தோம். இத்தனைக்கும் அவர் வெயிட்டாக இருப்பார் என்றார்கள். தூக்கும்போது சாதாரண எடைதான் இருந்தார்.
அப்படியேதான் இருந்ததா? அவங்க முகத்தில் கன்னத்தில் இடது பக்கம் நான்கு ஓட்டை இருந்ததே?
நாங்கள் தூக்கி வைக்கும்போது முகத்தில் அப்படி எதுவுமே இல்லை. நாங்கள்தான் முகத்தை மற்றும் கை கால்களைக் கட்டினோம். அதற்குப் பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும்போதுதான் அந்த ஓட்டை இருந்தது.சிலர் எம்பாமிங் ஓட்டை என்கிறார்கள். ஆனால் முன்பே எம்பாமிங் செய்யப்பட்ட உடலை தான் உள்ளே வைத்தோம்.
நீங்கள் பார்க்கும்போது கன்னத்தில் ஓட்டை இல்லையா?
நிச்சயமாக நான் பார்க்கும்போது அப்படி ஓட்டை இல்லை.