இன்டர்வியூவிற்கு உதவும் ஆப்ஸ் அறிமுகம் !

ir-350x250

பிரபல மென்பாெருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் புதிதாக `இன்டர்வியூரெடி’ (InterviewReady) என்ற பெயரில் செயலி (ஆப்ஸ்) ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த செயலியின் தேவை குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள பிரிவின் தலைவர் ரஞ்சன் பண்டோ பாத்யாய கூறுகையில், “இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்து வேலை தேடி வெளி வருகின்றனர். இவர்களில் 53 சதவீதம் பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. மற்ற 47 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது அர்த்தமற்ற பேச்சாகும். அவர்களது ஆங்கிலம் பேசும் திறன் காரணமாக வேலை கிடைக்கவில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகையோருக்கு உதவும் விதமாக 6 மாத காலத்தில் இந்த செயலியை உருவாக்கியுள்ளாேம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்படும் மொபைல்போனில் இதை டவுன்லோட் செய்ய முடியும். 2-ஜி, 3-ஜி நெட்வொர்க் உள்ள மொபைல் போனில் இதை பதிவிறக்கம் செய்யலாம்.

தற்போது ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி, வங்காளம், குஜராத்தி, தமிழ், அராபிக், உருது ஆகிய மொழிகளில் இது வெளி வந்துள்ளது. இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு உதவும் விதமாக இந்த ஆப்ஸ் வந்துள்ளது. இதன் மூலம் இன்டர்வியூவுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தேவையான வழி முறைகளை இந்த ஆப்ஸ் அளிக்கும்.

வங்கித்துறை, பார்மா, உற்பத்தி சார்ந்த துறைகள், போக்குவரத்து, சுற்றுலா, சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நடைபெறும் இன்டர்வியூக்களுக்கு தயார்படுத்திக் கொள்ள இந்த ஆப்ஸ் உதவும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளவர்களின் வேலை பெறும் திறனை அதிகரிப்பதற்காக சமூக பொறுப்புணர்வோடு இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் எந்த விதமான லாப நோக்கமோ அல்லது இதன் மூலம் வருமானம் திரட்டும் நோக்கமோ கிடையாது. இந்த ஆப்ஸில் தங்களைப் பற்றிய விவரங்களை (ரெஸ்யூம்) பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுவரையில் 3 ஆயிரம் பேர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த 21 பேர் பதிவிறக்கம் செய்துள்ளர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெருநகரங்களைச் சாராதவர்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply