அரசு துறைகளில் 13720 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

download (9)

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,300 பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பில் கிராம நிர்வாக அதிகாரி (VAO) – 800, நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் -2 ஏ பணியிடங்கள் – 1,700, குரூப் – 4 பணியிடங்கள் – 2,800 என, 5,300 காலியிடங்களுக்கான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இதற்கான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 118 பணி

வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது வரம்புக்கு உட்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 – 9, இளநிலை உதவியாளர் – 8, தட்டச்சர் – 13, நகல் பரிசோதகர்/படிப்பவர் – 1,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 18, ஓட்டுநர் – 2, நகல் எடுப்பவர் – 2, அலுவலக உதவியாளர் – 20, இரவு காவலர் – 20 மற்றும் முழுநேர பணியாளர்/மசால்ஜி – 25 உள்ளிட்ட மொத்தம் 118 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015

மேலும் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான அறிய http://ecourts.gov.in/sites/default/files/Court_Recruitment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Leave a Reply