ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை குறித்து அரசியல் வட்டாரங்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வந்தபோதிலும் தற்போது புதிய தகவல் ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.
வெளிநாட்டு ஊடகமான ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் முகர்ஜியா என்பவர் தற்போது ஷீனா போரா கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கின்றார் என்பது தெரிந்ததே. கடந்த 2008ஆம் ஆண்டில் இந்த ஐஎன்எக்ஸ் மீடியா ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தியின் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் நிறுவனத்துக்கு பங்குகள் ஒதுக்கி, நிதி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்போது இந்த மீடியாவின் உரிமையாளராக இருந்த பீட்டர் முகர்ஜியா பல்வேறு தவணைகளாக பணத்தை கார்த்திக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி லண்டனில் இருக்கும் ஆர்ட்வியா டிஜிடல் நிறுவனம் கார்த்தி நிறுவனத்துக்கு ரூ.60லட்சம் மதிப்புள்ள பங்குகளை வழங்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இன்று கார்த்தி மற்றும் அவரது தந்தை ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.