ஆப்பிள் ஐபோன் 6 பிரமாண்ட அறிமுகம். அமெரிக்காவில் விழாக்கோலம்.

iphone 6ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 9ஆம் தேதி மேக் என்னும் கம்ப்யூட்டரை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து அதே நாளில் நேற்று ஆப்பிள் ஐபோன் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படடது. நேற்றைய அறிமுக நாளில் ஐபொனை 6ஐ வாங்க திருவிழாக்கூட்டம் போல் மக்கள் கூடியிருந்தனர்.

ஐபோன் என்ற ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த போன்கள் ஆப்பிளின் ஐஓஎஸ் இன்ற இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதன் முதல்பதிப்பு கடந்த 2007ம் வருடம் ஜூன் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்த செல்போன்களில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 4ஜி வசதிகள், வீடியோ, இமெயில் , வீடியோ கேம்ஸ், வாய்ஸ் மெயில் எனபல வசதிகள் உள்ளன. தற்போது ஐபோன் தலைமுறைகளில், 6வது வெர்சன் வெளியிடபட்டது.

இந்த அறிமுக விழாவை ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஆகியவற்றிலும், ஆப்பிள் நிறுவன அதிகாரபூர்வ இணையதளத்திலும் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த ‘ஐபோன் 6’ 4.7 மற்றும் 5.5 அங்குலத்தில் கிடைக்கின்றன. இதில் 128 ஜி.பி., மெமரி உள்ளது இதன் சிறப்பு. இந்த ஐபோனின் எடை 113 கிராம் மற்றும் நானோ சிம் பயன்படுத்தலாம்.

ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.., பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்களில் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும். ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான். இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.

Leave a Reply